கடைசி நிமிடம் வரை இழுபறி...இறுதியில் டிடிவி தினகரன் வேட்புமனு ஏற்பு..!
தமிழகத்தில் இன்று வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனு பரிசீலனையின் போது, டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம் செய்ததை கட்டி அதிமுக, திமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொட்ரந்து டிடிவி தினகரனின் வேட்பு மனு மீதான பரிசீலனை நடந்து வந்தது.
இந்நிலையில் தேனி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனின் வேட்புமனு ஏற்கப்பட்டது. வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தினகரன் உரிய ஆவணங்களை அளித்த பின்னர் ஏற்கப்பட்டது.