ராமேஸ்வரம் - பழனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்!
மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை வழியாக ராமேஸ்வரம் பழனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்
இன்று (செப்டம்பர் 16) மாலை 4.55 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில் (06780), இரவு 7.45 மணிக்கு மதுரை வந்தடையும்; பின்னர், 7.50 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு பழனி சென்றடையும்.
செப்டம்பர் 17ஆம் தேதி மதியம் 2.20 மணிக்கு பழனியில் இருந்து புறப்படும் ரயில் (06779), மாலை 4.25 மணிக்கு மதுரை வந்தடையும். பின்னர், 4.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, இரவு 8.10 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை சந்திப்பு, சோழவந்தான், திண்டுக்கல், அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம் வழியாக ரயில் இயக்கப்படும்.
– தெற்கு ரயில்வே அறிவிப்பு
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்:
06153/06154 - சென்னை சென்ட்ரல் → மதுரை
செப். 16 மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, செப். 17 அதிகாலை 4.30 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து செப். 17 பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும்.
06157/06158 - தாம்பரம் - மதுரை
செப். 16 இரவு 9.40 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு, செப். 17 அதிகாலை 5 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து செப். 17 இரவு 7 மணிக்கு புறப்படும்.
06161/06162 - சென்னை எழும்பூர் → மானாமதுரை (மெழு)
செப். 16 காலை 10.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு மானாமதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில் செப். 17 நண்பகல் 12 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்படும்

