தமிழகத்தில் வரலாறு காணாத வாக்குப்பதிவு..! #RECORD BREAK

 
1

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. 

இந்த நிலையில், இம்முறை 6 மணி நிலவரப்படி,தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 85.06% வாக்குகள் பதிவாகின. கரூர் 92.66%, சேலத்தில் 90.61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கொங்கு மண்டலத்தில் அதிகளவிலான வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னையிலும் 83.67% அளவுக்கு வாக்குகள் பதிவாகி உள்ளன.குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61% வாக்குப்பதிவும் நட்ந்துள்ளது. 


தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தம் 85.12% வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாடு விடுதலை அடைந்தது முதல் இதுவரை நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் முதல் முறையாக 85.10% வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.


இரவு 9 மணி அளவிலான வாக்குப் பதிவு விவரம்:

  • அரியலூர்-87.40%
  • செங்கல்பட்டு- 85.29%
  • சென்னை 83.73%
  • கோவை- 84.79%
  • கடலூர் 85.49%
  • தருமபுரி 90.14%
  • திண்டுக்கல் 89.06%
  • ஈரோடு 90.10%
  • கள்ளக்குறிச்சி 88.25%
  • காஞ்சிபுரம் 87.39%
  • கன்னியாகுமரி 75.61%%
  • கரூர் 92.64%
  • கிருஷ்ணகிரி 85.29%
  • மதுரை 80.55%
  • மயிலாடுதுறை 82.14%
  • நாகை 86.30%
  • நாமக்கல் 90.13%
  • பெரம்பலூர் 85.50%
  • புதுக்கோட்டை 83.89%
  • ராமநாதபுரம் 77.03%
  • ராணிப்பேட்டை 89.869%
  • சேலம் 90.73%
  • சிவகங்கை 76.61%
  • தென்காசி 82.40%
  • தஞ்சாவூர் 80.61%
  • நீலகிரி 78.95%
  • தேனி 81.92%
  • திருவள்ளூர் 83.76%
  • திருவாரூர் 83.77%
  • தூத்துக்குடி 80.55%
  • திருச்சி 85.44%
  • திருநெல்வேலி 77.93%
  • திருப்பத்தூர் 88.96%
  • திருப்பூர் 88.59%
  • திருவண்ணாமலை 89.46%
  • வேலூர் 88.76%
  • விழுப்புரம் 88.99%
  • விருதுநகர் 84.90%


1991-ம் ஆண்டு முதல் இதுவரை பதிவான வாக்குகள் சதவீதம்

  • 1991 - 63.92%
  • 1996 - 66.95%
  • 2001 - 59.07%
  • 2006 - 70.82%
  • 2011 - 78.12%
  • 2016 - 74.81%
  • 2021 - 72.81%

தமிழ்நாட்டில் தற்போதைய 2026 தேர்தலில் 4.87 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். 2021 தேர்தலில் 4.63 கோடி பேர் வாக்களித்த நிலையில், கடந்த தேர்தலை விட 24 லட்சம் பேர்தான் அதிகம் வாக்களித்துள்ளனர். இன்னும் வாக்குப்பதிவு விவரம் முழுமையாக தெரியவில்லை என்றாலும், அதிகபட்சம் ஓரிரு லட்சம் வாக்குகள் உயரலாம்.