வரலாறு காணாத விலை உயர்வு... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.8560 உயர்வு..!!

 
Gold

உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக தினந்தோறும் தங்கத்தின் விலையானது மாறி வருகிறது.

குறிப்பாக, அமெரிக்கா - ஈரான் போரின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே போவதால் டாலர் மதிப்பு உயர்கிறது. இது தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்ற சந்தேகத்தில் உள்ளனர்.

இந்நிலையில்,சென்னையில் நேற்று (மே 12) தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,330க்கும், ஒரு சவரன் ரூ.1,14,640க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,400க்கும், சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து, ரூ.1,23,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.330-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.30,000 உயர்ந்து ரூ.3,30,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது