ஆந்திராவில் கனமழை: பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு!!

 
palaru

ஆந்திராவில் பெய்துவரும் தொடர் மழையால் , பாலாற்றில் வரலாறு  காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

palar

ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது, பல மாவட்டங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன, அத்துடன் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.  திருமலையில் ஸ்ரீவாரி மெட்டு மார்க்கம் முழுவதும் பாறைகளும் கற்களும் நிறைந்துள்ளதால் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. அருவி போல் கொட்டும் வெள்ளப்பெருக்கால் இதை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒரு மாத காலம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில் ஆந்திராவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பாலாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் வேலூர். திருப்பத்தூர். ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஆந்திராவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.  நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .



அவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர் வெள்ள பாதிப்புகளை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பார்வையிட்டதுடன் உரிய துரிதமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.முன்னதாக ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.