திருமணமாகாத தம்பதிகளுக்கு இனி ஓயோவில் அனுமதி மறுப்பு
Jan 5, 2025, 13:30 IST1736064023000
திருமணமாகாத தம்பதிகளுக்கு இனி ஓயோவில் அனுமதி மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் பிறந்து வளர்ந்தவர் ரித்தேஷ் அகர்வால். தனது 19 வயதில் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு, OYO ஹோட்டல் நிறுவனத்தை ஆரம்பித்தார். 2011 ஆம் ஆண்டு Oravel stays என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், 2013 ஆம் ஆண்டு OYO Hotels & Homes என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இன்று இந்த நிறுவனம் உலகம் முழுவதும் 80 நாடுகளில் கிட்டத்தட்ட 800 நகரங்களில் கிளைகள் அமைத்து தங்களது சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் திருமணமாகாத தம்பதிகளுக்கு இனி ஓயோவில் அனுமதி இல்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. திருமணமான உரிய ஆதாரங்களோடு
வருவோருக்கு மட்டுமே இனி அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.