தமிழகம் வருகிறார் மத்திய மந்திரி பியூஷ் கோயல்..!
Dec 17, 2025, 14:02 IST1765960377776
தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால், சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி முரளிதர் மொகல் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஷ் கோயல் வருகிற 22-ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை வரும் அவர் தொகுதி பங்கீடு, கூட்டணி விவகாரம், புதிய கட்சிகளை கூட்டணிக்கு வரவைப்பது குறித்து பாஜக நிர்வாகிகளுடம் ஆலோசனை நடத்துவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.


