மிரட்டல் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும். - கே.பாலகிருஷ்ணன்

 
balakrishnan

தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் நிதி திரட்டுவதற்காகத் தான் என்று மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

K balakrishnan

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாட்டில் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது.

இந்த நேரத்தில் தீவிரமாக சோதனை நடத்து வதற்கான காரணம், தேவை என்ன இருக்கிறது?எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டிப் பணிய வைப்பதற்கான நடவடிக்கையாக இது உள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தற்போதைய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், சிறு தொழில் முதலாளிகள் உள்ளிட்டவர்களின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் நிதி திரட்டுவதற்காகத் தான் என்று மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இத்தகைய மிரட்டல் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.