மோடி அரசில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு
Feb 1, 2026, 11:48 IST1769926732443
மோடி தலைமையிலான அரசில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிர்மலா சீதாராமன், “கடந்த 12 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பிரதமர் மோடி தலைமையிலான நிர்வாகத்தில் நிலையானதாக உள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. உற்பத்தி துறையில் அக்கறை, வேலை வாய்ப்பு உருவாக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி சதவீதம் 7ஆக எதிர்பார்க்கப்படுகிறது. வறுமை பெரும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான அரசில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களை வலுப்படுத்த 'மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்' என்ற புதிய திட்டம் தொடங்கப்படும். இந்தியாவில் தரம் மிகுந்த விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கப்படும்.” என்றார்.


