"துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் குருகுல கல்வியைச் செயல்படுத்த முடியவில்லை" - ஆளுநர் அர்லேக்கர்

 
"துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் குருகுல கல்வியைச் செயல்படுத்த முடியவில்லை" - ஆளுநர் அர்லேக்கர்

புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல என தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் காட்டமாக கூறியுள்ளார்.

சென்னை துவாரகாதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவா கல்லூரியின் 59-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், “மாணவர்கள் புதிய தொழில்முனைவோராக உருவெடுத்து வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலைகளை உருவாக்குபவர்களாக  மாற வேண்டும். குருகுலக் கல்வி முறை தான் மதரஸா கல்வி முறை என்ற பெயரில் இங்கிலாந்தில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆனால் குருகுலக் கல்வி முறையை தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியவில்லை. தேவைப்பட்டால் திருத்தங்களை கூறலாம் என்றும் கருத்து. உங்களுக்காக உழைத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யோசிக்க வேண்டும். இது உங்களது குறை அல, நான் என்னை பற்றியும், எனது குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திப்பேன். சமுதாயத்தை பற்றி சிந்திக்கமாட்டேன் என்பது மெக்காலே கல்வி முறை. இதை நம்மால் மற்ற முடியவில்லை. இதற்காக தான் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவருகிறோம். நல்ல மனிதர்களை உருவாக்குவதற்கு தான் இந்த கல்வி முறை. மண்வளம் குறைதல், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பருவநிலை சவால்களை எதிர்கொள்ள அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்” என்றார்.