வினாத்தாள் குளறுபடி காரணமாக UGC NET மறு தேர்வு அறிவிப்பு..!!

 
Q

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் இளநிலை ஆய்வு உதவித்தொகை (JRF) பெறுவதற்கான தகுதியை நிர்ணயிக்கவும், Phd சேர்க்கைக்கான தகுதியை உறுதிப்படுத்தவும் யுஜிசி நெட் தேர்வு ஆண்டுதோறும் இருமுறை நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், ஆங்கிலம், வணிகவியல், மற்றும் சமூகவியல் வினாத்தாள்களில் தவறுகள் கண்டறியப்பட்டதை அடுத்து அந்த மூன்று பாடங்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.

நிபுணர் குழு நடத்திய ஆய்வில் வினாத்தாளில் பல்வேறு குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

வழங்கப்பட்ட தகவல்களில் தவறுகள் மற்றும் அச்சடிப்புப் பிழைகள், மொழிபெயர்ப்பு தவறுகள் மற்றும் இலக்கணப் பிழைகள் இருந்துள்ளன. முக்கிய அறிஞர்களின் பெயர்கள் மற்றும் புத்தகங்களின் பெயர்கள் விடுபட்டிருந்தது.

கேள்விகளின் வாக்கிய அமைப்பில் தவறுகள் மற்றும் எண்களில் குளறுபடி, தெளிவில்லாத விடைகள் மற்றும் ஒரே கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது.

இத்தனை தவறுகள் இருப்பதால், சில கேள்விகளை மட்டும் நீக்கிவிட்டு மதிப்பெண் வழங்குவது சாத்தியமில்லை என்பதால் மறுதேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 9 அன்று காலை ஆங்கிலம், மதியம் வணிகவியல், செப்டம்பர் 10 காலை சமூகவியல் மறுதேர்வு நடைபெறும் என என்டிஏ அறிவித்துள்ளது.

காலை தேர்வு 9:00 - 12:00 மணி வரையும் மதியம் 3:00 - 6:00 மணி வரையும் தேர்வு நடைபெறும் மறுதேர்வு

மறுதேர்வை எழுதும் மாணவர்களிடம் இருந்து எந்தக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.

மறுதேர்வு அறிவிக்கப்பட்ட மூன்று பாடங்களை தவிர்த்து மீதமுள்ள 84 பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்பை என்டிஏ வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் விடைக்குறிப்பு தொடர்பான தங்களின் ஆட்சேபனைகளை ஆகஸ்ட் 18 அன்று இரவு 11:59 மணி வரை பதிவு செய்யலாம். ஒரு கேள்விக்கு ஆட்சேபனை தெரிவிக்க ரூ.200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.