இட ஒதுக்கீட்டுக்கு எதிரான யு.ஜி.சி வரைவு - ஒன்றியக் கல்வி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்!!

 
mp

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்கா விட்டால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவதற்கு அனுமதிக்க பல்கலைக்கழக மானியக்குழு முடிவு செய்திருக்கிறது.

ugc

இது உயர்கல்விநிறுவன வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை நேரடியாக ஒழிப்பதற்கான சதி ஆகும். ஐ.ஐ.டி.ஐ.ஐ.எம்.மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். பட்டியலினத்தவர். பழங்குடியினர் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எத்தகைய தருணங்களில் ரத்து செய்யலாம் என்பதற்கான வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.


இந்நிலையில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான யு.ஜி.சி வரைவு எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி நிலுவை காலி இடங்கள் பொதுப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்படாது என கடும் கண்டனங்களுக்கு பிறகு கல்வி அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது. விளக்கம் போதாது. வரைவை தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை. உடனடியாக நிலுவை காலி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று ஒன்றியக் கல்வி அமைச்சருக்கு Dharmendra Pradhan கடிதம் எழுதியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.