திமுக இல்லாமல் அதிமுக ஆட்சி இருந்திருந்தால் இது நிச்சயம் நடந்திருக்கும்- உதயநிதி ஸ்டாலின்

 
udhayanidhi-3

நாமக்கல் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை மார்பளவு உருவ சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

Udhayanithi  

பின்னர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இங்கு உள்ளே வரும் போது மாணவிகள் அனைவரும் கைகளை பற்றி உற்சாக வரவேற்பு அளித்தனர்.மகிழ்ச்சி. சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி. தமிழாக எழுந்து நிற்கிறார் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை. விடுதலைக்காக தமிழ் மொழியை முழுமையாகப் பயன்படுத்திய கவிஞர். கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் பெருமையை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டியது நமது கடமை ஆகும். கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் பெயரை சட்ட பேரவை வளாகத்தில் ஒரு உள்ள கட்டிடத்திற்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார் கலைஞர் கருணாநிதி. அவருடைய பேரனான நான் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை கொள்கிறேன். 

தமிழ்நாட்டின் பெயரை மாற்ற இங்கு ஒருவர் முயற்சி செய்தார். திமுக ஆட்சி இல்லாமல் அதிமுக ஆட்சி இப்போது இருந்திருந்தால் பெயரை மாற்றி இருப்பார்கள். திருவள்ளுவரை காவிச் சாயத்தில் அடைக்க அவர்கள் முயல்வார்கள், வரலாற்றை மாற்றக் கூடியவர்கள் இங்கு இருக்கிறார்கள். வாட்ஸ் அப் மூலம் திரித்துக் கொண்டு இருக்கிறார்கள்” எனக் குற்றஞ்சாட்டினார்.