"தம்பி பிரக்ஞானந்தாவுக்கு எனது பாராட்டுகள்"- உதயநிதி ஸ்டாலின்
Aug 28, 2026, 18:54 IST1787923461879
தம்பி பிரக்ஞானந்தா மென்மேலும் பல உலக சாதனைகளைப் படைக்க என் அன்பும், வாழ்த்தும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “அமெரிக்காவில் நடைபெற்ற #GrandChessTour போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற, முதல் இந்திய வீரர் என்ற புதிய வரலாறு படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் தம்பி பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! உலகின் முன்னணி வீரர்களை எதிர்கொண்டு, தனது அபாரமான திறமை மற்றும் தன்னம்பிக்கையால் இந்த வெற்றியை அவர் பெற்றிருப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை.
தம்பி பிரக்ஞானந்தா மென்மேலும் பல உலக சாதனைகளைப் படைக்க என் அன்பும், வாழ்த்தும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

