"பேரவையில் முதல்வர் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை"- உதயநிதி ஸ்டாலின்

 
s

சட்டமன்றமா? சினிமா தியேட்டரா? என்ற சந்தேகம் எங்களுக்கு வந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் இன்று எங்கு பார்த்தாலும் மின்தடை ஏற்பட்டு வருகிறது. மின்வெட்டால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தையும் முதலமைச்சர் விஜய் கொச்சைப்படுத்தி பேசுகிறார். அரசின் தவறுகளை சுட்டிக்காட்டினால் தவெக அரசு கைது செய்கிறது. சட்டமன்றமா? சினிமா தியேட்டரா? என்ற சந்தேகம் எங்களுக்கு வந்துவிட்டது. தமிழக சட்டமன்றத்தின் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. சட்டமன்றத்தை சினிமா ஷூட்டிங்போல ஆளுங்கட்சி மாற்றியிருக்கிறது. 

அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் டான்ஸ் ஆடுவார் என நினைக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் தற்போது மின்சாரம் எங்கே எனத் தேடி வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் திமுகவுக்கு நிறைய வழக்கறிஞர்கள் தேவைப்படுகின்றனர். சட்டம் ஒழுங்கு உட்பட சட்டமன்றத்தில் நாம் கேட்ட கேள்விக்கு முதல்வர் எந்த பதிலும் சொல்லவில்லை.கடந்த ஒரு மாதத்தில் தவெக அரசின் போலி பிம்பம் உடைந்துவிட்டது. தூய ஆட்சி என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது” என்றார்