“அரசு வழங்கும் லேப்டாப் மாணவர்களின் வாழ்க்கையில் நிச்சயம் கேம் சேஞ்சராக இருக்கும்”- உதயநிதி
மாணவர்களை வளர்த்தெடுத்தால்தான் மாநிலம் வளரும், நாடும் வளரும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

’உலகம் உங்கள் கையில்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எதிர்காலத்தில் தூரத்தில் உள்ள மனிதர்கள் முகம் பார்த்து பேசிக்கொள்ளும் கருவி வரும். ஒரு இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் கல்வி கற்கும் சூழல் வரும் என சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே இனி வரும் உலகம் என்ற உரையில் பெரியார் சொன்னார். அவர் அன்று சொன்னதெல்லாம் இன்று அறிவியல் கருவிகளாக நம் கையில் கிடைத்துள்ளன. அரசு வழங்கும் லேப்டாப் மாணவர்களின் வாழ்க்கையில் நிச்சயம் கேம் சேஞ்சராக இருக்கும். லேப்டாப், இணையதளம், புதுமைகளை உருவாக்கும் எண்ணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும், கல்விதான் யாராலும் அழிக்க முடியாத, பறிக்க முடியாத சொத்து என முதல்வர் அடிக்கடி சொல்வார். கல்வி வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்திவருகிறது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் இன்று மிகமிக முக்கியமான நாள்.
மைக்ரோசாப்ட், ஆப்பிள், பேஸ்புக், ஸ்பேஸ் எக்ஸ் போன்ற உலகின் பல பெரிய நிறுவனங்கள் தொடங்கியது ஒரு லேப்டாப்பில்தான். ஒரு லேப்டாப், இண்டர்நெட் கணெக்சன், இன்னவேட்டிவ் மைண்ட்செண்ட் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்” என பேசினார்.


