“10 நாட்களுக்கு சங்கி கூட்டம் தூங்க போவது இல்லை”- உதயநிதி ஸ்டாலின்
மொழி உரிமை, மாநில உரிமை, பெண் உரிமை என வந்துவிட்டால் காஷ்மீரில் இருப்பவர்களுக்கு நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயர்தான் முதலில் ஞாபகத்திற்கு வரும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நடைபெற்றும் மகளிரணி மாநாட்டில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “மொழி உரிமை, மாநில உரிமை, பெண் உரிமை என வந்துவிட்டால் காஷ்மீரில் இருப்பவர்களுக்கு நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயர்தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். கடல்போல் காட்சியளிக்கும் திமுக மகளிர் அணி மாநாட்டு கூட்டத்தை பார்க்கும் சங்கி கூட்டமும், அடிமை கூட்டமும் அடுத்த 10 நாட்களுக்கு தூங்காது. சங்கிகள் கூட்டம் புலம்புகிறது. அடிமை கூட்டம் பதறுகிறது. மகளிரணி மாநாடு மிகுந்த எழுச்சியோடு நடக்கிறது. செந்தில் பாலாஜி, கனிமொழிக்கு பாராட்டுகள்.
சுயமரியாதைமிக்க மகளிர் குழு இருக்கும் வரை சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டில் நுழையவே முடியாது. தமிழ்நாட்டில் பாசிச சக்திகள் நுழைந்தால் அதனை தடுக்கும் சக்தி முதலமைச்சருக்கு மட்டுமே உள்ளது. தமிழ்நாடு எப்போதும் அமைதி, சமத்துவம், மதநல்லிணக்கதுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். பாஜக எத்தனை அடிமைகளை கொண்டுவந்தாலும் தமிழ்நாட்டில் அவர்களால் காலூன்ற முடியாது. தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான். திராவிட முன்னேற்றக் கழகத்துக்காக ஏராளமான மகளிர் தங்களது பங்களிப்பை தந்துள்ளனர். இந்தியாவிலேயே முதன்முறையாக மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்கியது கலைஞர் ஆட்சியில்தான். முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சியில் முதலில் போட்ட கையெழுத்து மகளிர் விடியல் பயணத்திட்டத்துக்கானதுதான். கலைஞர் ஆட்சியில்தான் காவல்துறையில் மகளிர் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை ஒன்றிய அரசு சிதைத்துள்ளது.” என்றார்.


