நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள்- உதயநிதி கோரிக்கை

 
கலைஞர் நூற்றாண்டில் பாசிஸ்ட்டுகள் வீழ்ந்தார்கள் என்ற வரலாற்றை படைக்க உழைப்போம்- உதயநிதி ஸ்டாலின்

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள், அனுபவம் முக்கியம் தான் இருந்தாலும் தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், தலைவர் யோசித்தாலும் நீங்கள் முதல்வரிடம் அதை சொல்ல வேண்டும் என டி.ஆர்.பாலுவிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவின் நூல்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், புத்தகங்களை தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான  ஸ்டாலின்  வெளியிட உரிமைக்குரல் என்ற முதல் நூலை திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியும்,  T.R. baalu, The man & message என்ற முதல் நூலை முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரமும், MY Voice for the voiceless என்ற முதல் நூலை இந்து என்.ராமும், பாதை மாறாப் பயணம் ( பாகம் -3) என்ற முதல் நூலை கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்..

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சேலம் மாநாட்டை மிகச் சிறப்பான வெற்றி மாநாடாக மாற்றி காண்பித்த உங்கள் அனைவருக்கும், இளைஞர் அணி தம்பிமார்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சேலத்தில் பல லட்சம் இளைஞர்கள் கூடிய மாநாட்டிற்கு பிறகு தற்போது நடக்கும் முதல் நிகழ்ச்சி. மேலும் இந்த அரங்கும் புதுப்பித்த பிறகு நடக்கும் முதல் நிகழ்ச்சி பொருளாளர் அவர்களுக்கு அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இளைஞர் அணி மாநாடு மிகச் சிறப்பாக நடத்தி காண்பித்து இருக்கிறோம்.

Udhayanidhi

கலைஞரோடு கலந்த கலவையாக பாலு இருக்கிறார். கலைஞர் மீது பற்று கொண்டவர் டி.ஆர். பாலு. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் பாலு மாமா பாதை மாற பயணம் என்று புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். கலைஞர் அவர்கள் வழியை மட்டுமல்ல முதல்வர் அவர்களின் வழியையும் பின்பற்றி புத்தகங்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார். டி.ஆர்.பாலு மாமாவை பிறந்த குழந்தையிலிருந்து எனக்குத் தெரியும். என்னை தூக்கி வளர்த்ததில் அவரும் மிக மிக முக்கியமானவர். முதலமைச்சரை எல்லோரும் தளபதி என்று அழைப்பார்கள், அதற்கு முன்பாகவே இளம் தென்றல் என்று அழைத்தவர் டி.ஆர்.பாலு. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள், அனுபவம் முக்கியம் தான் இருந்தாலும் தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், முதல்வர் யோசித்தாலும் நீங்கள் தலைவரிடம் அதை சொல்ல வேண்டும்” என்றார்.