"தமிழ்நாட்டை சங்கிக் கூட்டத்தால் தொட்டுக் கூட பார்க்க முடியாது" - உதயநிதி ஸ்டாலின்

 
ச் ச்

கட்டுப்பாடு இல்லாமல் 1 கோடி இளைஞர்கள் திரண்டாலும் அதனால் யாருக்கும் பயனில்லை, அந்த கூட்டத்தை வைத்து யாராலும் எதுவும் சாதிக்க முடியாது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “வானவில் கலர் கலரா அழகா இருக்கும். அதனை பார்ப்பதற்கு மக்கள் நிறைய பேர் கூடுவார்கள். ஆனால் அது நிரந்தரமல்ல, உதயசூரியன் மட்டும்தான் நிரந்தரம். பெண்களுக்காக களம் அமைத்து கொடுப்பதில் எப்போதும் முன் நிற்பதும் நம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆண்களுக்கு நிகராக போராட்டக் களங்களிலும் பொதுக்கூட்ட மேடைகளிலும் பெண்கள் பங்குபெற்றதால்தான் நம் திராவிட இயக்கம் திசைகள் எங்கும் வளர்ந்தது. கட்டுப்பாடு இல்லாமல் 1 கோடி இளைஞர்கள் திரண்டாலும் அதனால் யாருக்கும் பயனில்லை, அந்த கூட்டத்தை வைத்து யாராலும் எதுவும் சாதிக்க முடியாது. பாஜக என்னும் மதவாத யானையை அடக்கும் அங்குசம்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

ச்

தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். முதலில் அவர் அதிமுகவை பாஜகவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். கட்டுப்பாடு இல்லாமல் 1 கோடி இளைஞர்கள் திரண்டாலும் அதனால் யாருக்கும் பயனில்லை, அந்த கூட்டத்தை வைத்து யாராலும் எதுவும் சாதிக்க முடியாது. என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவுதான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்கும் பரிதாபம் மட்டுமே வருகிறது. கடைசி உடன்பிறப்பு இருக்கும் வரைக்கும் தமிழ்நாட்டை சங்கிக் கூட்டத்தால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால் திராவிடக் கொள்கையினை நான் எந்தளவு சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழகாவே நான் பார்க்கிறேன், தமிழ்நாடு எப்பவும் டெல்லிக்கு out off control தான். மிரட்டி பணிய வைக்க நினைத்தால் கனவில் கூட நடக்காது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.