நீட் தேர்வு- புதிய வழக்கு தொடரப்படும்: உதயநிதி ஸ்டாலின்

 
உதயநிதி ஸ்டாலின்

நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசு நிராகரித்ததற்கு எதிராக தேவையிருப்பின் புதிய வழக்கு தொடரப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.


அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வரைவுத் தீர்மானம் வாசித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து சட்ட போராட்டம் செய்யப்படும். நீட் தேர்வுக்கு எதிராக உச்சநிதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது மற்றும் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மாசோதாவை ஒன்றிய அரசு நிராகரித்ததற்கு எதிராக தேவைப்படின் மத்திய அரசுக்கு எதிராக புதிய வழக்கு தொடரப்படும்.