“கிறிஸ்துவ கொள்கையும், திராவிட கொள்கையும் ஒன்றே” - உதயநிதி

 
திமுகவை அழிப்பேன் என்று கிளம்பி உள்ளவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்- உதயநிதி ஸ்டாலின் திமுகவை அழிப்பேன் என்று கிளம்பி உள்ளவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்- உதயநிதி ஸ்டாலின்

பாசிஸ்ட்டுகளின் எல்லா நடவடிக்கைகளையும் தாண்டி தமிழகத்தையும் தமிழ்நாட்டையும் காப்போம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


பெந்தகோஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பாக மதுரை நேரு நகர் பகுதியில் கிறிஸ்மஸ் திருவிழா நடைபெற்றது.இதில் துணை முதல்வர் மு.க.உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய  உதயநிதி, “கிறிஸ்துமஸ் என்றால் கொண்டாட்டம் தான். இன்றும் அதே  போல் இன்று கூடி உள்ளோம். மனித நேயம் அன்பை போதிக்க வேண்டும் என்பது கிறிஸ்த்துவம் மற்றும் திராவிட கொள்கை. இந்திய ஒன்றியத்தை ஆளும் அரசுக்கு தமிழகம் தமிழ்நாடு மீது பயம் உள்ளது. எங்கே மக்கள் ஒன்றாகிவிடுவார்களோ, நம்மை எதிர்த்துவிடுவார்களோ என்ற பயம் உள்ளது. 


சாதியால் மதத்தால் பிரித்தாள நினைக்கிறார்கள். அது நடக்காது. ஒன்றிய அரசின் பாசிஸ்டுகளின் தமிழகத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி எடுபாடது. தமிழகம் தனித்துவமான மாநிலம். மக்களை பிரித்து பிரித்தாளும் சூழ்ச்சியால் கலவரத்தை ஏற்படுத்த முயன்றால் மக்களே தக்க பாடம் புகட்டுவார்கள். அதற்கு ஒருநாளும் மக்கள் இணங்க மாட்டார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் ஆட்சி நடத்துகிறார் முதல்வர். பிரித்துக்கொடுப்பது என்றாலே ஒன்றிய அரசுக்கு பிடிக்கவில்லை. ஒன்றிய அரசு நிதியை பிரித்து கொடுக்காவிட்டாலும் எல்லா தேவைகளையும் நிறைவேற்றி வருகிறார் முதல்வர். பாசிஸ்ட்டுகளின் எல்லா நடவடிக்கைகளையும் தாண்டி தமிழகத்தையும் தமிழ்நாட்டையும் காப்போம். திமுகவிற்கும் சிறுபான்மை மக்களுக்கான பந்தத்தை பிரிக்க முடியாது. ஒன்றிய அரசுக்கு தமிழகத்தின் மீது இரக்கம் இல்லாமல் வெறுப்பு தான் உள்ளது. நமக்குள் இருப்பது கொள்கை உறவு” என்றார்.