“2019-ல் அதிமுகவை பாஜகவிடம் அடகுவைத்தார், 2021-ல் லீஸுக்கு விட்டார். 2026-ல் விற்றுவிட்டார்”- உதயநிதி ஸ்டாலின்
இந்திய அளவில் பாஜகவிற்கு எதிரான ஒரு ஜனநாயக போரை நம்முடைய தலைவர் தலைமையில் நடத்த வேண்டுமென மற்ற மாநிலங்களில் உள்ள தலைவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முரட்டு அடிமையாக பிரதமர் மோடிக்கு எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் செயல்படுகிறார். உயிருடன் இருந்தால் எம்ஜிஆர் அழும் அளவுக்கு அதிமுகவை அழிவுப்பாதைக்கு எடப்பாடி கொண்டு செல்கிறார். நீங்கள் எவ்வளவுதான் பெயிண்ட் அடிச்சாலும் தமிழ்நாடு மக்கள் உங்கள் முகங்களில் கரியைத்தான் பூசுவார்கள். பாஜகவின் கலவர அரசியலை தமிழ்நாடு மக்கள் என்றைக்கும் அனுமதிக்க மாட்டார்கள். Westலயும் திமுகதான், Best என்பதை இந்த கூட்டம் நிரூபிக்கும். அதற்கு உங்கள் எழுச்சியே சாட்சி. திமுக இளைஞரணி கட்டுக்கோப்பாக உள்ளது. இந்திய அளவில் பாஜகவிற்கு எதிரான ஒரு ஜனநாயக போரை நம்முடைய தலைவர் தலைமையில் நடத்த வேண்டுமென மற்ற மாநிலங்களில் உள்ள தலைவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்
2019-ல் அதிமுகவை பாஜகவிடம் அடகுவைத்தார், 2021-ல் லீஸுக்கு விட்டார். 2026-ல் விற்றுவிட்டார். தன்னுடைய சுய லாபத்திற்காக அதிமுகவை அழிவுப் பாதையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு செல்கிறார். தமிழ்நாட்டில் நடைபெற இருக்கிற 2026 சட்டமன்றத் தேர்தலில், மேற்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளிலும் கழகம் வெற்றிபெறும். அதனை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் எதிர்காலம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கியுள்ள இன்றைய இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு அமைந்துள்ளது” என்றார்.

