"என்னமா நீ கட்டுற" மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற தாய்- பதறிய உதயநிதி

 
"என்னமா நீ கட்டுற" மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற தாய்- பதறிய உதயநிதி

பதற்றத்தில் மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற தாயின் செயலால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமண விழாவில் மெய் மறந்து சிரித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

சென்னை ஆர்.கே.நகரில் திமுக சார்பில்,'எளியோர் எழுச்சி நாள்' என்ற பெயரில் 48 இணைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். மணமக்களுக்கு கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி என 30 பொருட்கள் திருமண பரிசாக வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு மணமக்களுக்கு தலா ரூ.25000 மொய் வழங்கபட்டன.


திருமண நிகழ்வின்போது பதட்டத்தில் மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முயன்ற தனது தாயால் மணமகன் பதறிப்போனார். உடனே அருகில் இருந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிரித்தபடி, “என்னமா நீங்க தாலி கட்றீங்க? மாப்பிள்ளையிடம் தாலியை கொடுங்கள்” எனக் கூறினார். மணமகனின் தாய் செய்த செயலால் மணமேடை சிரிப்பலையில் மூழ்கியது. மணமகனிடம் தாலியை எடுத்து கொடுப்பதற்கு பதிலாக மணமகளுக்கு தானே கட்ட முயன்ற தாயின் செயல் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.