புத்தாண்டு விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் -உதயநிதி

 
Udhayanidhi Udhayanidhi

ஒன்றிய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார் 4000 கோடி பணம் வரவில்லை, நிதியை கேட்டு முதலமைச்சர்  வலியுறுத்தி வருவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

udhayanidhi

நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி அங்காடியிம் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  துவக்கி வைத்தார். தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கிடும்  வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வாடிக்கையாளர் அட்டைகளை அறிமுகப்படுத்தினார். மேலும் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் சுய உதவிக் குழு மகளிர் தயாரிப்புப் பொருட்களைப் பார்வையிட்டு அங்கு இருந்த சுய உதவிக் குழு மகளிருடன் கலந்துரையாடினார். மேலும், மதுரை உணவுத் திருவிழா மற்றும் மதி விற்பனைக் கண்காட்சியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்நவுடன் லேப்டாப்கள் வழங்கப்படும். பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்குவதோடு, வி மாத காலத்திற்கு Preplexity pro AI வசதி இலவசமாக வழங்கப்படவுள்ளது. விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் பரிசளிப்பவர்கள், தனியார் நிறுவனங்கள் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்துள்ள பொருட்களை வாங்கி பண்டிகை நாட்களில் பரிசளிக்க வேண்டும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். முதலில் ஒன்றிய அரசிடமிருந்து பணம் வர வேண்டும். தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார் 4000 கோடி பணம் ஒன்றிய அரசிடமிருந்து வரவில்லை. நிதியை கேட்டு வலியுறுத்தி முதலமைச்சர் கேட்டு வருகிறார். 100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் தனது கண்டனம் தெரிவித்துள்ளார்” என்றார்.