"நெல் கொள்முதல் குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார் ஈபிஎஸ்"- உதயநிதி
வழக்கத்தை விட ஒரு மாதத்துக்கு முன்பே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எந்த இடத்திலும் நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கவில்லை. 50 நாட்களில் 10 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வழக்கத்தை விட ஒரு மாதத்துக்கு முன்பே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. தினம் 4 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. 50 நாட்களில் 1,825 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் நெல் மூட்டைகள் வைக்க இடம் உள்ளது.
தஞ்சை மண்ணில் பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவரின் எண்ணம் தஞ்சை மண்ணில் ஒருபோதும் எடுபடாது.டெல்டாக்காரரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் ஒரு போதும் நிறைவேறாது. திமுக அரசு என்றும் விவசாயிகளுக்கு துணை நிற்கும். 10 நாட்களில் நெல் கொள்முதல் பணிகள் அனைத்தும் நிறைவடையும். வழக்கத்திற்கு மாறாக ஒரு மாதத்திற்கு முன்பே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்.ஒரத்தநாடு பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 3,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒன்றிய அரசு செறியூட்டப்பட்ட அரிசிக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் இதுவரை மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்தாண்டு 2.5 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது ” என்றார்.


