"பிரச்னைகளை திசை திருப்பவே திமுக மீது அமித்ஷா விமர்சனம்”- உதயநிதி ஸ்டாலின்

 
"பிரச்னைகளை திசை திருப்பவே திமுக மீது அமித்ஷா விமர்சனம்”- உதயநிதி ஸ்டாலின்

திமுக குறித்த அமித்ஷாவின் விமர்சனத்திற்கு நாங்கள் அசரப்போவதில்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திமுக குறித்த அமித்ஷாவின் விமர்சனத்திற்கு நாங்கள் அசரப்போவதில்லை. அவரின் விமர்சனம், மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட இப்போது உள்ள பிரச்சனைகளை திசை திருப்பும் செயல். ஒன்றிய அரசு எங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை தந்தால் போதும். விளையாட்டுத்துறைக்காக அரசு ரூ.2.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 44 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.2.52 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி வீரர்கள் என்னிடம் அன்று வைத்த ஒரே கோரிக்கை, இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று விளையாட்டுத்துறையில் முக்கியமான நாள். நாட்டிலேயே தமிழ்நாட்டுல மட்டும்தான் இது நடக்கிறது” என்றார்.