ஃபுல் ரெஸ்ட்... துபாய் சென்ற உதயநிதி!கொடைக்கானல் செல்லும் மு.க.ஸ்டாலின்

 
ழ்

சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கொடைக்கானலுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2 எம்பி தேர்தல்கள், கடந்த சட்டமன்ற தேர்தல் ஆகிய தேர்தல்கள் முடிந்த பின்னர் கொடைக்கானல் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் மு.க.ஸ்டாலின். இந்த மூன்று தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கொடைக்கானலுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு சென்றார்.