தமிழகத்தின் துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தின் துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரன் மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனுமாகிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்றார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழா மேடைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைக்கப்பட்டு துணை முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அமைதியாக கீழேயே அமர்ந்திருந்தார்.
தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுகவிடம் இருந்து தட்டிப்பறித்து மீண்டும் ஆட்சி அமைத்தது திமுக, 3 ஆண்டுகள் முடிவடைந்து 4வது ஆண்டை நோக்கி திமுக ஆட்சி சென்று கொண்டுள்ளது. இந்த 3 ஆண்டில் அமைச்சர் நாசர் மட்டும் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சராக உதயநிதி மற்றும் டிஆர்பி ராஜா இடம்பெற்றனர். அதே நேரத்தில் ஒரு சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பதவிநீக்கம் செய்யப்பட்ட நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவியும், அமைச்சர் பதவி பெற்ற உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.