மேடையில் கோரிக்கை வைத்த கமல்ஹாசன்! நொடியில் உறுதியளித்த உதயநிதி

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு சார்பாக மீடியா அண்ட் என்டர்டைன்மென் பிஸ்னஸ் கான்க்கிலேவ் சவுத் கனெக்ட் மாநாடு -2025 சென்னை கிண்டியில் உள்ள நட்டத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு சார்பாக மீடியா அண்ட் என்டர்டைன்மென் பிஸ்னஸ் கான்க்கிலேவ் சவுத் கனெக்ட் மாநாடு -2025 சென்னை கிண்டியில் உள்ள நட்டத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டு மேடையில் பேசிய கமல்ஹாசன், “மிக முக்கியமான காலகட்டத்தில் உள்ளோம். சினிமா ஆரம்பகட்டத்தில் இருந்தது போன்று தற்போது இருக்கக்கூடிய காலகட்டம் முக்கியமான காலகட்டம். தொடர்ந்து தொழில் நுட்பங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள் வந்தால் பழைய தொழில்நுட்பம் அழிந்துவிடும் என்று கூறப்பட்டது. அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். தற்போது புதிய வருவாய் ஈட்டக் கூடியதாக ஓடிடி தளம் மாறி இருக்கிறது. இந்திய பண்பாட்டின் அம்பாசிடராக சினிமா இருக்கும் என்றும் இந்திய சினிமாவிற்கு ஒரு நீண்ட எதிர்கால திட்டம் தேவை. தற்போது இருக்கக்கூடிய வியாபாரத்தை கெடுக்காமல் புதிய தொழில்நுட்பங்களை சினிமா துறைக்குள் கொண்டு வர வேண்டும். தற்போது இருக்கும் சூழலில் பொழுதுபோக்கு வரியை மறுபரிசலனை செய்ய வேண்டுமென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.
பின்னர் மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பொழுதுபோக்கு ஊடகம் மூலமாக சமூக கருத்துகளை எடுத்துச் சொன்ன இயக்கம் திராவிட இயக்கம். கலைஞர் வசனம் எழுதிய பராசக்தி திரைப்படம் தென்னிந்திய திசை வழியையே மாற்றி காட்டியது. திரைத்துறைக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் தற்போதைய முதலமைச்சரும் நிறைய திட்டங்களை நிறைவேற்றி கொடுக்கிறார்கள். பொழுதுபோக்கு வரியில் இருந்து முழு வரி விலக்கு வேண்டுமென நடிகர் கமலஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.அதன் முக்கியத்துவம் எனக்கு நன்றாக தெரியும். அதனால் உறுதியாக சொல்கிறேன். உங்கள் கோரிக்கையை முதலமைச்சர் உடைய கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரிய முறையில் ஆய்வு செய்து சட்ட விதிகளை ஆராய்ந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அதற்கு நான் துணை நிற்பேன் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.