உதயநிதி ஸ்டாலின் கைது இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம் - வானதி சீனிவாசன்..!

 
1

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

உதயநிதி ஸ்டாலின் கைது இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம்.  சட்டத்தின் மீதான நம்பிக்கை ஒவ்வொரு தருணங்களிலும் நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.

அதேபோல், தமிழ்நாட்டுப் பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்பவர்கள் மீது எவ்வித பாகுபாடின்றி இதேபோன்ற கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் பட்சத்தில் முதல்வர் விஜய் அவர்களின் இந்த நடவடிக்கையை வரவேற்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.