"கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவாக பதில்களை எழுதுங்கள்"- உதயநிதி ஸ்டாலின்

 
student with udhayanidhi stalin

பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை ராமநாதபுரத்திலிருந்து இன்று தொடங்கியுள்ளேன்- உதயநிதி ஸ்டாலின்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மார்ச் 3-ஆம் நாள் திங்கள்கிழமை பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்குகிறது,  தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3316 மையங்களில்  எழுதும் சுமார் 8.21 லட்சம் மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதவுள்ளனர். 


அவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவாக பதில்களை எழுதுங்கள். எவ்வித பதட்டமும் வேண்டாம். படிக்கிற ஆர்வத்துடன் உங்கள் உடல்நலன் மீதும் கவனம் செலுத்துங்கள். தேர்வு காலம் முழுமையும் புத்துணர்ச்சியோடு நீங்கள் இருப்பது மிக முக்கியம்.  தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெறவும், சாதனை புரியவும் என் அன்பும், வாழ்த்தும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.