“இந்த SofaModelஆட்சி-யில, போலீசாலயும் பாதுகாப்பு இல்ல. போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல”- உதயநிதி
இந்த #SofaModelஆட்சி-யில, போலீசாலயும் பாதுகாப்பு இல்ல. போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், "சென்னை கோடம்பாக்கத்துல Police உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வச்சு, Sexual Harassment-க்கும் ஆளாக்குன சம்பவம் அதிர்ச்சியை தருது. Police-ட்ட இருந்து காப்பாத்திக்க, அந்த சிறுவன் Police Station-க்கு ஓட வேண்டிய நிலையில தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் இருக்கு. இதுமட்டுமல்ல, வேளச்சேரியில Walking போக வெளிய வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் Sexual Harassment-க்கு ஆளாக்கின கொடுமையும் நடந்துருக்கு.
கும்பகோணத்துல ஆளுங்கட்சியினர் தாக்கினதுல ஒரு போலீஸ்காரருக்கே கை உடைஞ்சு போனதாவும் செய்தி. இந்த #SofaModelஆட்சி-யில, போலீசாலயும் பாதுகாப்பு இல்ல. போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல. ஆட்சியை காப்பாத்திக்க MLA-க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்க Police Department-ஐ ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்யனும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

