சேலம் இளைஞர் அணி மாநாடு புதிய சமத்துவ இந்தியாவின் வரலாற்றை தெற்கிலிருந்து எழுதவுள்ளது - உதயநிதி!

 
dmk

சேலம் இளைஞர் அணி மாநாடு புதிய சமத்துவ இந்தியாவின் வரலாற்றை தெற்கிலிருந்து எழுதவுள்ளது என அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் உதயைநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தி.மு.கழகத்தின் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப் போகும் கழக இளைஞரணியின் 2ஆவது மாநில மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது. கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் பொதுச்செயலாளர் - பொருளாளர் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் முன்பாக, கழக துணைப் பொதுச்செயலாளர் அத்தை கனிமொழி அவர்கள், சேலத்துச்சிங்கம் மறைந்த அண்ணன் வீரபாண்டியார் கொடிமேடையில், கழகத்தின் கறுப்பு-சிவப்பு கொடியை ஏற்றி வைத்தார்கள். 


மேலும், கழக மாணவரணிச் செயலாளர் சகோதரரர் எழிலரசன் அவர்கள் மாநாட்டை திறந்து வைத்தார்கள். சேலம் இளைஞர் அணி மாநாடு, புதிய சமத்துவ இந்தியாவின் வரலாற்றை தெற்கிலிருந்து எழுதவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.