“பாஜகவின் No.1 அடிமை, முரட்டு அடிமை இபிஎஸ்” - உதயநிதி ஸ்டாலின்
பாஜகவின் No.1 அடிமையாக இபிஎஸ் இருக்கிறார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக விமர்சித்தார்.

தஞ்சையில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ மாநாட்டில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பாஜகவின் No.1 அடிமையாக இபிஎஸ் இருக்கிறார். ஒன்றிய அரசின் அடையாளம் பாசிசம். முந்தைய அதிமுக அரசின் அடையாளம் அடிமைத்தனம். பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது பாஜக. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் உ.பி., மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மைக் என்று நினைத்து கண்ணாடியை பார்த்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஒன்றிய பாஜக அரசின் அடையாளம் பாசிசம் என்று சொல்லுவார்கள். அதிமுக அரசின் அடையாளம் அடிமை அதிமுக அரசு என்று சொல்வார்கள். ஆனால் திமுக அரசின் அடையாளம் மகளிருக்கான அரசு என்பது தான் அடையாளம். எப்படியாவது தமிழ்நாட்டில் நுழைந்துவிடலாம் என பாசிஸ்ட்டுகள் கனவு காண்கின்றனர்; அவர்கள் எத்தனை பேர் வந்தாலும்... தமிழ்நாட்டை திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றங்கள் அதிகரித்துள்ளது, தேர்தலுக்கு மட்டும் தமிழகம் வருகிறார் பிரதமர், எத்தனை பேர் வந்தாலும் திமுகவை ஒன்றும் பண்ண முடியாது. முரட்டு பக்தர் கேள்விப்பட்டு இருப்பீங்க... முரட்டு தொண்டர் பார்த்து இருப்பீங்க... ஆனால் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி.” என்றார்.


