ஆளுநர் ரவிக்கு சட்டமன்றத்தில் வாக்கிங் போவது மட்டும்தான் வேலை- உதயநிதி ஸ்டாலின்

வருவார்.. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்.. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போய்விடுவார். இப்படிப்பட்ட ஆளுநர் நமக்கு தேவையா? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை இடைக்கழிநாடு கலைஞர் திடல் பகுதியில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு, 48 கழக தோழர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு நாணயம், 2024 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, 200-கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உழைத்த மாநகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்களை கௌரவித்தல், 500 முரசொலி ஓராண்டு சந்தா வழங்குதல், 200 விளையாட்டு குழுக்களுக்கு விளாயாட்டு உபகரணங்களை வழங்குதல், அண்ணா அறிவாளத்தில் பணியாற்றி வரும் 13 தொண்டர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கும் விழா நடைபெற்றது மேலும் திருமண மணமக்கள் பாஸ்கர் - இந்துமதி ஆகியோருக்கு திருமணம் நடத்தி வைத்து வாழ்த்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மொத்தம் 11 இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது, பொங்கல் விழாவா அல்லது பொங்கல் மாநாடா என்ற அளவில் இந்த விழா நடைபெற்று வருகின்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது இந்த பகுதிக்கு நேரில் வந்து வாக்கு சேகரித்தேன். நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற செய்தமைக்கு நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன். நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தமிழகம் வந்து இருந்தார். ஆனால் 40 தொகுதிகளில் வெற்றி பெற செய்து பாரதிய ஜனதா கட்சிக்கு தோற்வியை கொடுத்து மோடிக்கு நீங்கள் கொடுத்து அனுப்பி உள்ளீர்கள். சமத்துவப் பொங்கல் விழாவை கெடுக்க வேண்டும் என்றே பொங்கல் தினத்தில் ஒன்றிய அரசு நிகழ்ச்சி நடக்கிறது.
மக்களால் தேர்தெடுக்கப்பட்டவரா தமிழக ஆளுநர் ரவி? ஆளுநர் ரவி செய்யும் ஒரே வேலை சட்டமன்றத்தில் வாக்கிங் செல்வது மட்டுமே இப்படி பட்ட ஆளுநர் நடக்கு தேவையா? எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் ஆளுநரை தொலைக்காட்சியில் காட்ட வேண்டும் என பேசினார். எடப்பாடி பழனிசாமி உறவினர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நடத்தியுள்ளது. இன்னும் 11 பாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து சேவை, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கி வருகின்றது. இந்த திட்டம் மூலம் 8 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே இந்த திட்டம் செயல்பட்டு வருகின்றது. மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் எடுத்து காட்டாக இருப்பது தான் திராவிட மாடல் அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாதம் 1000 ரூபாய் முன்கூட்டியே வழங்கப்பட்டு வருகின்றது. ஈரோடு இடைத்தேர்தெலில் நாம் போட்டியிட உள்ளதை தொடர்ந்து அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளது. பத்து முறை எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைந்ததை தொடர்ந்து 11 முறை தேர்தலை தோல்வியடைய இருப்பதால் தேர்தல் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என பேசினார்.