பாஜக என்றாலே 420 கட்சிதான்; வீடியோ, ஆடியோ காட்சிதான் - உதயநிதி ஸ்டாலின்

 
udhayanidhi-3

பாஜகவிற்கு எதிரான வலுவான கூட்டணி அமைவதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக, வடமாநில தொழிலாளர்கள் குறித்து பொய்யான செய்தியை பரப்புகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Maamannan will be my last film as actor': Udhayanidhi Stalin on becoming  minister | The News Minute

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், "நான் முதல்வன் திட்டம்" மூலம் தமிழ்நாடு முழுவதிலும் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவசம் பயிற்சி வழங்கும் திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அரசு துறை செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

திட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் கடந்த ஆண்டு அவரது பிறந்த நாளில், தொடங்கி வைத்த "நான் முதல்வன் திட்டம்" பல மாணவர்களுக்கு பயன் உள்ளதாக செயல்பட்டு வருகிறது. தற்போது போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்களை தயார் செய்துகொள்ளும் வகையில் நான் முதல்வன் திட்டத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

Special Programme Department Should Be Watchdog To Ensure Schemes Reach  People: Udhayanidhi Stalin

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவன பணியிடங்களில் தமிழ்நாடு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து பிரதமரை சந்தித்த போது கோரிக்கை வைத்தேன். அதற்கு மாணவர்கள் தயாராகும் வகையில் நான் முதல்வன் பயிற்சி திட்டம் உறுதுணையாக இருக்கும். வட மாநில தொழிலாளர்கள் குறித்து பாஜக பொய் செய்தியை பரப்பி வருகிறது, முதலமைச்சர் பிறந்த நாள் விழாவுக்கு வந்த பீகார் மாநில துணை முதல்வர் உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் தலைவர்கள், பாஜகவை வீழ்த்த வேண்டும், அதற்கு வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என பேசியிருந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக, புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தியை பரப்பிவருகிறது. பாஜக என்றாலே ஆடியோ, வீடியோ காட்சிதான். அதனால் தான் அந்த கட்சியில் இருப்பவர்கள் 420 கட்சி என்று சொல்லி கட்சியிலிருந்து வெளியே வருகிறார்கள்” என்றார்.