ஜல்லிக்கட்டை விளையாட்டு போட்டிகள் வரிசையில் கொண்டு வர நடவடிக்கை- உதயநிதி ஸ்டாலின்

 
Udhayanidhi

ஜல்லிக்கட்டை விளையாட்டு போட்டிகள் வரிசையில் கொண்டு வர தமிழ்நாடு முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என  தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

udhayanidhi stalin
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் ரகுபதி பெரிய கருப்பன் மெய்ய நாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராஜா சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய வளர்ச்சி திட்டங்கள் அரசின் திட்டங்கள் பொது மக்களிடம் முறையாக சென்றடைகிறதா அதில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அரசு அறிவித்துள்ள திட்டம் எந்தெந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது, எந்தெந்த திட்டங்கள் மக்களிடம் அதிகம் சென்றடைந்துள்ளது? எந்தெந்த திட்டங்களில் குறைகள் உள்ளது? அதை எவ்வாறு சரி செய்வது என்று மாவட்ட அமைச்சர்களுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலும் இந்த ஆய்வு நடைபெற்று உள்ளது. பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் சில திட்டங்களில் தொய்வு உள்ளது. அதை சரி செய்யும் படி கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த ஆய்வுக் கூட்டத்தின் கருத்துக்களை முதலமைச்சரின் அலுவலகத்தில் ஒப்படைத்து விடுவேன்.

udhayanidhi-3

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று இது குறித்து அவர் தான் தெரிவிக்க வேண்டும். ஜல்லிக்கட்டை விளையாட்டு போட்டிகள் வரிசையில் கொண்டு வர தமிழ்நாடு முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சி காலத்தில் 4.62 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வந்த புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள உள் விளையாட்டு அரங்கம் பணிகள் தற்போது பாதியிலேயே நிற்கக்கூடிய நிலையில், இது குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளேன்” என்று தெரிவித்தார்.