அய்யன் வள்ளுவரின் புகழ் ஓங்கட்டும் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழர் பண்பாட்டின் அங்கமாக திகழும் திருக்குறளை போற்றுவோம், அய்யன் வள்ளுவரின் புகழ் ஓங்கட்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், குமரியில் நடைபெற்று வருகிற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில், ‘வெள்ளி விழா’ ஆண்டு மலரை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட போது உடன் பங்கேற்றோம். வான்புகழ் கொண்ட வள்ளுவரை போற்றும் வகையில், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா தோரணவாயிலுக்கு நம் முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி, கடற்கரை சாலைக்கு ‘திருவள்ளுவர் சாலை’ என பெயர் சூட்டியதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
குமரியில் நடைபெற்று வருகிற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில், ‘வெள்ளி விழா’ ஆண்டு மலரை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வெளியிட்ட போது உடன் பங்கேற்றோம்.
— Udhay (@Udhaystalin) December 31, 2024
வான்புகழ் கொண்ட வள்ளுவரை போற்றும் வகையில், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா தோரணவாயிலுக்கு நம்… pic.twitter.com/ZjVOGn2fCW
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல்ஹாசன் சார் அவர்களின் வரிகளில், இசைப்புயல்
ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையில் உருவாகியுள்ள ‘வள்ளுவ மாலையை’ நம் முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்கள். திருக்குறள் போட்டிகளில் வென்ற மாணவ – மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். தமிழர் பண்பாட்டின் அங்கமாக திகழும் திருக்குறளை போற்றுவோம். அய்யன் வள்ளுவரின் புகழ் ஓங்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.