தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம் - உதயநிதி ஸ்டாலின்!

 
Udhayanidhi

தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கை நோக்கி நடைபோடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட_மாடல் அரசின் சீரிய நடவடிக்கைகளால் நாட்டிலேயே அதிகபட்சமாக 9.69% வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது.  ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாடு அடைந்துள்ள உயரத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. 

ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டில் காட்டும் பாரபட்சத்துக்கு நடுவே, நம் முதலமைச்சர் அவர்கள் தீட்டிய திட்டங்களின் வெற்றிக்கு இந்தப்புள்ளிவிவரமே சாட்சி. தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கை நோக்கி நடைபோடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.  நம் முதலமைச்சர் அவர்களின் கரங்களை மேலும் வலுப்படுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.