இளைஞரணியை வலுவூட்டும் உதயநிதி! ஒரு லட்சம் இளைஞர்களை கூட்டி மண்டல கூட்டம் நடத்த திட்டம்
Dec 5, 2025, 16:30 IST1764932400529
திருவண்ணாமலை மாவட்டம் வன்னியந்தாங்கல் பகுதியில் இந்த மாதம் இளைஞரணி நிர்வாகிகளின் மண்டல கூட்டம் நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வன்னியந்தாங்கல் பகுதியில் இந்த மாதம் இளைஞரணி நிர்வாகிகளின் மண்டல கூட்டம் திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் , அதற்கான முன்னேற்பாடு பணிகளை இன்று துணை முதல்வர் உதயநிதி பார்வையிட்டு , ஆலோசனைகளை வழங்கினார். இந்த இளைஞரணி மண்டல கூட்டத்தில் , சுமார் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தவெகவுக்கு போட்டியாக திமுக இளைஞரணியை வலுவூட்டும் உதயநிதி ஸ்டாலின், மண்டல கூட்ட ஏற்பாடு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


