தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் - உதயநிதி ஸ்டாலின் மரியாதை..

 
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் - உதயநிதி ஸ்டாலின் மரியாதை.. 

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி,  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமனுவேக் சேகரினின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பரமக்குடி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், அரசு சார்பில்  பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், பெரிய கருப்பன், கயல்விழி செல்வராஜ்,  மூர்த்தி மற்றும் நவாச் கனி எம்.பி., உள்ளிட்ட  பல திமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.  

Image

முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், “விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளான இன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் சக அமைச்சர் பெருமக்கள் - நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களுடன் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தோம்.

நாட்டு விடுதலைக்காவும் - ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரது பிறந்த நாளை, நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் அரசு விழாவாக அறிவித்தார்கள். மேலும், திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு மணி மண்டபத்தையும் நம் திராவிட மாடல் அரசு அமைத்து வருகிறது. சமத்துவம் படைக்க சமரசமற்ற போராளியாக வாழ்ந்து மறைந்த தியாகி இமானுவேல் சேகரனாரின் புகழ் ஓங்கட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.