பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது- உதயநிதி ஸ்டாலின்

 
udhayanidhi stalin rahul

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10ம் தேதி நடைபெற்றது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு, இன்று எண்ணப்பட்டன.  கர்நாடக சட்டப்பேரவை பொறுத்தவரை பாஜக ,காங்கிரஸ்,  மதசார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவிய நிலையில் சுமார் 2615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். 

DMK-Congress coalition: Rahul Gandhi-Kanimozhi final talks |  தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி: ராகுல்காந்தி-கனிமொழி இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 138 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல் ஆளுங்கட்சியான பாஜக 62 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.


காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள எம்பி கனிமொழி, “கர்நாடக மாநிலத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ்க்கு எனது வாழ்த்துக்கள். இது ஒரு மாநிலத்திற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, நாளை நாடு முழுவதும் நடைபெறவுள்ள மாற்றத்திற்கான வாக்குறுதியும் கூட. மதச்சார்பற்ற சக்திகளை நம்புபவர்களுக்கு இந்த முடிவு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக எதிரொலிக்கிறது. இனி வரும் அரசுக்கும் கர்நாடக மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 


இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள 
காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எனது வாழ்த்துகள். சர்வாதிகாரம் - மதவாதம் - மக்களைச் சுரண்டும் ஊழல் என்றிருந்த பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்களின் முடிவு, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும். பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.