எல்லா அமைச்சருக்கும் பட்ட பெயர் வச்சு தான் கூப்டுகிட்டு இருக்கோம் - உதயநிதி ஸ்டாலின்..!

 
1

தாராபுரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், விஜய் அறிவிக்கவுள்ளதாகக் கூறப்படும் த.வெ.க நிழல் அமைச்சரவை (Shadow Cabinet) மற்றும் அதன் நிர்வாகிகளை விமர்சித்தார். அதில், "அவர்களின் அமைச்சர்கள் பெயர் யாருக்கும் தெரியாது. எல்லா அமைச்சருக்கும் ஒரு பட்டப் பெயர் வைத்துத்தான் நாம் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

"முதல்வருக்கே அமைச்சர்களின் பெயர் தெரியாது" சங்கி அமைச்சர், பவுடர் அமைச்சர், லாட்டரி அமைச்சர் என பட்டப்பெயர் சொன்னால்தான் தெரிகிறது; முதல்வருக்கே அமைச்சர்களின் பெயர் தெரியாது. தவெக ஆட்சியில் தலைவர்கள் என்றால் சோபா, எம்எல்ஏக்கள் என்றால் பெட்டி என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம். 

உதாரணமாக, த.வெ.க நிர்வாகி ராஜ்மோகனைக் குறிப்பிடும் போது, அவர் பேசத் தொடங்கினால் காதை மூடிக் கொள்ள வேண்டும் என்று கூறி அவருக்கு "பட்டிமன்ற அமைச்சர்" என்று தாங்கள் பட்டப் பெயர் வைத்துள்ளதாகப் பேசினார்.