தில்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை முதல்வர் விஜய் நிரூபித்துள்ளார் - உதயநிதி ஸ்டாலின்..!!

 
udhai

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது காவல் அராஜகத்தை ஏவி கைது செய்துள்ள இந்த சோஃபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஒட்டுமொத்த நாடும் - இவர்கள் கூட்டணி வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் சில கட்சிகளும் கூட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் போது, இந்த ஃப்டம்மி முதல்வர், யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார்.

சுயமரியாதையும் - நாட்டின் மீதும் அக்கறையும் கொண்ட அறிவார்ந்த இளைஞர்களை கைது செய்வதன் மூலம், தில்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை இந்த முதல்வர் நிரூபித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துடிக்கும் இளைஞர் படையின் குரலை ஒடுக்குவதை ஏற்கமுடியாது” என்று உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.