கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 செஸ் போட்டி - உதயநிதி பரிசுகளை வழங்கினார்!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 செஸ் போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில், மாஸ்டர்ஸ் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 செஸ் போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில், மாஸ்டர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற திரு.அரவிந்த் சிதம்பரம் மற்றும் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற திரு. வி.பிரணவ் ஆகியோருக்கு கேடயம் மற்றும் பரிசு தொகைக்கான காசோலைகளை வழங்கினார் மேலும் இந்நிகழ்ச்சியில் கிராண்ட்மாஸ்டர் திரு. டி. குகேஷ் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க பயிற்சிகள் மேற்கொள்ளவும், தயாராவதற்காகவும் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு. ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., புகழ்பெற்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் வீரர் டி.குகேஷ் மற்றும் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.