வேலூர், அரக்கோணம் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!
வேலூர் மற்றும் அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டோம். தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் - தொகுதியில் நிலவும் சூழல் - தேர்தலுக்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தயார்படுத்துவது உள்ளிட்டவை குறித்து மாண்புமிகு அமைச்சர் - சட்டமன்ற உறுப்பினர்கள் - மாவட்டக்கழகச் செயலாளர்கள் மாவட்ட - ஒன்றிய - பகுதி - நகர - பேரூர் கழக நிர்வாகிகள் - மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரிடம் விரிவாக கருத்துக்களைக் கேட்டறிந்தோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு பணியாற்றும் வகையில் கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவை நமது கழகத் தலைவர் @mkstalin அவர்கள் அமைத்துள்ளார்கள்.
— Udhay (@Udhaystalin) February 2, 2024
இக்குழுவின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் அரக்கோணம்… pic.twitter.com/KjFZ061KN9
2021 ல் தமிழ்நாட்டில் விடியலைத் தந்தது போல, 2024-ல் இந்திய அளவிலும் விடியலைத் தர வேண்டும் என்ற லட்சியதோடு ஒற்றுமையோடு பணியாற்றுமாறு உரையாற்றினோம். இதேபோல் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டோம். மாவட்ட அமைச்சர் - மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - மாவட்ட - ஒன்றிய - பகுதி - நகர - பேரூர் கழக நிர்வாகிகள் - உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். தொகுதி மக்களின் கோரிக்கை - கள நிலவரம் - பிரச்சார வியூகம் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடினோம். ஜனநாயகப் போரின் முக்கிய கட்டத்தில் இருக்கும் நாம் அனைவரும் #INDIA கூட்டணியின் வெற்றிக்கு, இரவு - பகல் பாராமல் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார்.