திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

 
udhayanidhi

திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று கலந்து கொண்டோம். தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் -  கள நிலவரம் - பாக முகவர்களின் பணி - தொகுதி பார்வையாளர்களின் ஒருங்கிணைப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகளிடம் விரிவாக கேட்டறிந்தோம்.


அவதூறுகளும், பொய் பிரச்சாரங்களும் சூழ்ந்துள்ள இந்த காலகட்டத்தில், அவற்றை முறியடித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட அமைச்சர் -  மாவட்டக் கழக செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - மாவட்ட  -  ஒன்றிய  - நகர -  பேரூர் கழக நிர்வாகிகள் - உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றினோம் என குறிப்பிட்டுள்ளார்.