கரூர் மற்றும் திண்டுக்கல் மக்களவை தொகுதி திமுக நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை

 
udhayanidhi

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கரூர் மற்றும் திண்டுக்கல் மக்களவை தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். 

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான கழக மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆய்வுக் கூட்டங்கள் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், இன்று நிறைவு பெறவுள்ளன.   இந்நிலையில், இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கரூர் மற்றும் திண்டுக்கல் தொகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகளை சந்தித்து மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.


தொகுதிக்குட்பட்ட அமைச்சர்கள் - மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - மாவட்ட - ஒன்றிய - பகுதி - நகர - பேரூர் கழக நிர்வாகிகள் - மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளை சந்தித்து தொகுதி நிலவரம் - தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினோம். வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, INDIA கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும் வகையில் தேர்தல் பணியாற்றுமாறு கழக நிர்வாகிகளை கேட்டுக்கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார்.