"ஜோதிமணியை எதிர்க்கும் எந்த கொம்பனாக இருந்தாலும் டெபாசிட் இழக்கணும்" - உதயநிதி பரப்புரை!!

 
tn

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

jothimani

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , கடந்த முறை அக்கா ஜோதிமணி அவர்கள் கிட்டத்தட்ட 4,21,000 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தீர்கள்.  ஆனால் இந்த முறை அதைவிட வித்தியாசம் அதிகமாக இருக்க வேண்டும். குறைந்தது ஐந்து லட்சம் வாக்கு வித்தியாசத்தில் , அக்கா ஜோதிமணியை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் எந்த கொம்பனா இருந்தாலும் டெபாசிட் வாங்க கூடாது. செய்வீங்களா? இது நான் உங்களுக்கு அளிக்கக் கூடிய வாக்குறுதி.  இதை நீங்கள் செய்து கொடுத்தால் நான் அடிக்கடி கரூர் மாவட்டத்திற்கு வருவேன். ரெண்டு மாதத்திற்கு ஒருமுறை வருவேன். அண்ணன் செந்தில் பாலாஜி இந்த மாவட்டத்தில் நடத்தாத போட்டியே கிடையாது.

tn

நான் இப்பொழுது உங்களுக்கு ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். நீங்கள் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அக்கா ஜோதி மணியை வெற்றி பெற செய்துவிட்டீர்கள் என்றால் . நான் மாதம் இரண்டு முறை இந்த கரூர் மாவட்டத்திற்கு வந்து,  இங்கு எம்எல்ஏ, மாவட்ட செயலாளர்கள், எம்.பி., ஆகியோருடன் இணைந்து மாவட்டத்திற்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் முதலமைச்சருக்கு எடுத்துச் சென்று அதை நிறைவேற்றி தருவேன். நான் இப்போது உங்களுக்கு வாக்குறுதியை கொடுத்து விட்டேன். நான் கலைஞரின் பேரன் சொல்வதை செய்வேன்.  இப்பொழுது நீங்கள் எனக்கு வாக்குறுதி அளியுங்கள். நிச்சயம் அக்காவை வெற்றி பெற செய்வீர்களா? என்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கலகலப்பாக உரையாற்றினார்.