தைரியம் இருந்தா அண்ணாசாலை பக்கம் வர சொல்லுங்க - அண்ணாமலைக்கு உதயநிதி சவால்!

 
udhayanidhi udhayanidhi

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். அதாவது, உதயநிதி ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் பிரதமர் மோடியை விமர்சித்து பார்க்கட்டும் என கூறினார். பிரதமர் மோடியை கெட் அவுட் என கூற தைரியம் இருக்கிறதா உதயநிதிக்கு? அவுங்க அப்பா தான ஆளுங்கட்சி முதலமைச்சர்? இவரு தான துணை முதலமைச்சர்? இதை கூற உதயநிதிக்கு தைரியம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். 


இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை மும்மொழி கொள்கை விவகாரத்தை திசைதிருப்ப முயற்சித்து வருகிறார். முடிந்தால் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை வாங்கி தர சொல்லுங்கள். அண்ணா அறிவாலயம் குறித்து அண்ணாமலை பேசி இருந்தார்...முடிந்தா அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்க என கூறினார்.